சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள்

சாத்தூரில் சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வண்டிகள் மற்றும் அடையாள அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில், தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 10 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.8.24 இலட்சம் மதிப்பில் விற்பனை வண்டிகள் மற்றும் அடையாள அட்டைகளையும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் 11 புதிய மின்கல தூய்மை வாகனங்களையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு வளர்ந்து வரக்கூடிய நகரத்திற்கு மிகவும் அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சாத்தூர் நகராட்சிப்பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 10 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.8.24 இலட்சம் விற்பனை வண்டிகள் மற்றும் அடையாள அட்டைகளும், சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் குப்பைகளை சேகரிக்கும் வண்ணம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் 11 புதிய மின்கல தூய்மை வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உட்கட்டமைப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.

Tags

Next Story