நீதிக்கு புறம்பாக நடந்தால் விஸ்வரூபம் எடுப்பேன்- ஒபிஎஸ்

நீதிக்கு புறம்பாக நடந்தால் விஸ்வரூபம் எடுப்பேன்- ஒபிஎஸ்

 நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் நடக்கிறார்களோ.? அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் நடக்கிறார்களோ.? அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் பகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ள நிலையில்., அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து., பேசுகையில்._ ஒவ்வொரு கட்சியும் தேர்தலை முன்னிட்டு அவரவர் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தான் தேர்தல் அறிக்கை அறிவிக்கப்படும் அதன் நடைமுறைப்படுத்துவது என்பது செயல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராமநாதபுரம் தொகுதி ராஜா சேதுபதி ஆட்சிக்கு உட்பட்டது அங்கு வாழுகின்ற மக்கள் நீதியின் படி தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது அப்பகுதியின் வரலாறு தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற தர்மயுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்ற நான் நீதி கேட்டு தான் அந்த நீதிக்கு உரிய தீர்ப்பு வழங்குகிற மக்கள் ராமநாதபுரம் மக்கள். அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அநீதிக்கும் நீதிக்கும் புறம்பாக யாரெல்லாம் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக என்னுடைய விஸ்வரூபம் எடுப்பேன். சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது அந்த வழக்கு தொடர்ந்து நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றார். தொடர்ந்து டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story