உள்ளாட்சி அமைப்புகளை கலைத்தால் வழக்கு தொடருவோம்
உள்ளாட்சி அமைப்புகளை கலைத்தால் வழக்கு தொடருவோம் என செஞ்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
செஞ்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் அணையேரி ரவி தலைமை தாங்கினார். செயலாளர் கவரை அய்யனார், பொருளாளர் சோ.குப்பம் ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 5 ஆண்டு கள் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
. 5 ஆண்டுகள் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகள் தொடர வேண்டும் எனவும், அரசியலமைப்புக்கு எதிராக உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க கூடாது எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அதையும் மீறி உள்ளாட்சி அமைப்பு களை கலைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொட ருவோம். மேலும் 356 பிரிவை நீக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ள தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலை வர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத் தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலையரசி, சுபா, சுலோச்சனா ஜெய பால், பிருந்தா, பராசக்தி, அன்னமயில் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.