ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்

ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்

பொதுமக்கள் வைத்த பேனர்

விழுப்புரத்தில் பொதுமக்கள் வைத்த விளம்பர பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து கண்டமானடி கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே அமைந்துள்ள ரெயில்வே கேட்டை கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் ரெயில்வே நிர்வாகத்தினர் மூடிவிட்ட னர்.

இதனால் ஜானகிபுரத்தில் இருந்து கண்டமானடி, கொளத்தூர், பில்லூர், அரியலூர், சித்தாத்தூர், காவணிப்பாக்கம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லவும், அங்கிருந்து விழுப்பு ரம் நகரத்துக்கு வரவும் சுமார் 5 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மேற்கண்ட கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே ரெயில்வே கேட்டை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மூடப்பட்ட ரெயில்வே கேட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தியும் ஜானகிபுரம், கண்டமானடி பகுதியை சேர்ந்த பொதுமக் கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வைத்துள்ளனர். மேலும் இந்த கேட்டை திறக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு கேட்டை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை (புதன்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் பொதுமக்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ரெயில்வே கேட்டை திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித் துள்ள ஜானகிபுரம், கண்டமானடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்,

அதில், ஜானகிபுரத்தில் பல வருடங்களாக மக்கள் பயன்பாட்டில் உள்ள ரெயில்வே கேட்டை பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மூடி யதை கண்டித்து அறவழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், செவி சாய்க்காத ரெயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வா கத்தை கண்டித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்ப தாக பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக பொதுமக்களால் வைக்கப்பட் டுள்ள விளம்பர பதாகைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.

Tags

Next Story