மாணவர்கள் நன்றாக இருந்தால் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, பாரத் கல்வியியல் கல்லூரியில் 10 ஆவது பட்டமளிப்பு விழா, பேராசிரியர் கணேசனார் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.சுபத்ரா தலைமை வகித்தார். பேராசிரியர் சி.செந்தாமரை வரவேற்றார். பாரத் கல்விக்குழும செயலர் புனிதா கணேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தும், பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தியும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத் தலைவரும், டாக்டர் ஜே.ஸி.குமரப்பா கல்விக்குழுமத் தலைவருமான கல்வியாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "மாணவர்களாகிய நீங்கள் இப்போது ஆசிரியர்களாக மாறிவிட்டீர்கள்.
ஆசிரியர் என்பவர் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆற்றல் உடையவராக தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர் பணியை நேசிக்க வேண்டும். ஆசிரியர்களை தெய்வத்திற்கு நிகராக மாணவர்கள், பெற்றோர்கள் மதிக்கின்றனர்.
ஆசிரியர் நன்றாக இருந்தால், மாணவர்கள் நன்றாக இருப்பார்கள். மாணவர்கள் நன்றாக இருந்தால் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்" இவ்வாறு அவர் பேசினார். விழாவில், 170 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் பாரத் கல்வி குழும முதல்வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றபின் தேசிய கீதம் இசைக்க விழா நிறைவுற்றது.