கழிவுநீர் கால்வாயில் அடைப்பு - கொசு தொல்லை !
கழிவுநீர் கால்வாயில்
அருந்ததியர் நகரில் உள்ள கால்வாயை முழுமையாக துார்வாரி, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சி, 21வது வார்டு, திருக்காலிமேடு அருந்ததியர் நகரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து, வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்குகிறது. இதனால், இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பகுதிவாசியினருக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, திருக்காலிமேடு அருந்ததியர் நகரில் உள்ள கால்வாயை முழுமையாக துார்வாரி, கழிவுநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story