10, 20 ரூபாய் நாணயங்களை வாங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை

10, 20 ரூபாய் நாணயங்களை வாங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை

நாமக்கல்லில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல்லில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ரூ.10, ரூ.20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறுத்தியுள்ளார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.... இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது.

அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற பொய்யான தகவல்கள் பரவிய வண்ணமே உள்ளது. இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். பொதுவாக நாட்டின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக நாணயங்களுக்கு பல்வேறு வடிவங்களும் அளிக்கப்படுகின்றன.

நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் காரணத்தால் பல்வேறு வடிவங்களும் கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பானது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை முதன் முதலில் 2005-ஆம் ஆண்டிலும், 20 ரூபாய் நாணயத்தை 2020-ஆம் ஆண்டிலும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வர தொடங்கியது. இதுவரை பதினான்கு வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வடிவங்கள் வாரியாக மாறுபட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் (₹) இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம் (₹) இருக்காது.

எனவே மக்கள் அதனை போலியான நாணயம் என நம்பத்தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன என்றும், அவை செல்லாது என்றும் பல வதந்திகள் மக்களிடையே காணப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே போதியே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களின் தொலைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் விடுத்து, அதனை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. மேலும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபெற 14440 என்ற கட்டணமில்லா சேவையை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 03.05.2024 தேதிபடி ரூ.10 நாணயங்கள் 69,696 இலட்சம் நாணயங்களும், ரூ.20 நாணயங்கள் 15,963 இலட்சம் நாணயங்களும் புழக்கத்தில் உள்ளது.

(Source https://m.rbi.org.in/Scripts/BS CurrencyCirculationDetails.aspx) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும், அவற்றை செல்லாது என கூறுவதோ, அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 124A -வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம். அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயத்தை அவமதிக்கும் வகையில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story