கஞ்சா, புகையிலை விற்றால் குண்டர் சட்டம் - ஆட்சியர் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா, புகையிலை, கூலிப் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவுப் படி காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.
இதில் டிசம்பர் மாதம் 595 கிலோ கூலிப் 8016 கிலோ புகையிலை மற்றும் 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 115 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் கூலிப் புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனை தொடர்பாக 90427-38739 என்ற எண்ணிலும் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக 94439-67578 என்ற எண்ணிலும் Whatsapp மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்பவர்கள் பற்றி விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.