சிவகங்கையில் மத நல்லிணக்க இப்தார் நோம்பு

சிவகங்கையில் மத நல்லிணக்க இப்தார் நோம்பு

சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை பேணி காக்கும் வகையில் இப்தார் நோம்பு நிகழ்ச்சி நடைபெற்றது


சிவகங்கையில் மத நல்லிணக்கத்தை பேணி காக்கும் வகையில் இப்தார் நோம்பு நிகழ்ச்சி நடைபெற்றது

சிவகங்கை நேரு பஜார் பகுதியில் உள்ள வாலாஜா நவாப் பள்ளிவாசல் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி வாசலாகும். இங்கு ரமலான் நோன்பு மாதம் என்பதால் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோன்பு கஞ்சி, குளிர்பானங்கள் என நோன்பு முடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் வழங்கப்பட்டது.

அதேபோல் மனநலம் குன்றிய மாணவர்களும் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கென்று சிறப்பாக தயார் செய்யப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டது. மேலும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாவலர்களும், ஏராளமான பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத, மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேனினர்.

Tags

Next Story