தாராபுரத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - அமைச்சர் கயல்விழி தீவிர வாக்கு சேகரிப்பு

தாராபுரத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - அமைச்சர் கயல்விழி தீவிர வாக்கு சேகரிப்பு

இப்தார் நோன்பு திறப்பு 

தாராபுரத்தில் இத்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாசுக்கு தீவிர வாக்கு சேகரிக்கும்பணியில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் இருக்க தாராபுரம் பள்ளி வாசலில் இஸ்லாமிய மக்கள் இந்துக்களை தங்கள் சகோதரர்களாக நினைத்து இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலையில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி கலந்துகொண்டார்.அப்போது இந்தியா கூட்டணி ஈரோடு தி.மு.க.நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், நகர செயலாளர்எஸ்.முருகானந்தம், நகர துணை செயலாளரும்,நகராட்சி கவுன் சிலருமான வி.கமலக்கண்ணன், நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர துணை செயலாளர் செலின் பிலோமினா, நகர பொருளாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.எம்.யூசுப், சீனிவாசன், அய்யப்பன், பைக் செந்தில்குமார்மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story