இரவு ரோந்து குழுவிற்கு ஐஜி பாராட்டு

இரவு ரோந்து குழுவிற்கு ஐஜி பாராட்டு
ஐஜி பாராட்டு
இளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழுவை தென் மண்டல ஐஜி பாராட்டினார்.

மதுரை மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் நடக்கும் கொலை கொள்ளை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க புதிதாக ( Q R T) (quick reaction team) விரைவு காவலர் குழு என்ற பெயரில் தனிப்படையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலை முழுவதும் சமயநல்லூர் காவல் உட்கோட்டம் ஒரு தனிப்படையும் திருச்சி மதுரை நெடுஞ்சாலை பகுதிக்கு வேலூர் காவல் உட்கோட்டம் மற்றொரு தனிப்படை காவல்துறையினரை என இரண்டு குழுக்கள் செயல்பட்டு வருகிறது .இந்த இரவு ரோந்து QRT தனிப்படையில் 3 ஏ ஆர் காவலர்கள் 3 லோக்கல் காவல் நிலைய காவலர்கள் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் என எட்டு பேர் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் QRT விரைவு குழு வாடிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாயாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் மதுரை துவரிமான் முதல் மதுரை மாவட்டம் எல்லை முடிவு திண்டுக்கல் எல்லை ஆரம்பம் வரை இரவு 12 மணிக்கு ரோந்து பணியில் இருந்தபோது திண்டுக்கல் ஆரம்பம் நிலக்கோட்டை காவல் உட்கோட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு ஆம்னி வேன் ஒரு இருசக்கர வாகனம் அருகே இரண்டு நபர்கள் தனியாக இரவு 12 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையின் சாலை ஓரம் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவர்களை கியூ ஆர் டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பல்லடத்தில் தனியார் நிறுவனத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமணமான நபர் வேலை செய்து வந்த இடத்தில் திருமணமான வேறொரு பெண்ணுடன் இரண்டு வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில்அந்த இளம் பெண்ணை கொலை செய்து காரில் வைத்து மதுரை மாவட்ட பகுதியில் புதைப்பதற்காக கொண்டு வந்ததாக காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளனர்.

கொலை செய்த நபர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்த காவல்துறையினர் இந்த தகவலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவித்தனர். கொலை செய்த நபர்களை கையும் களவுமாக பிடித்த கியூ ஆர் டி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாயாண்டி காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் காவலர்கள் சௌந்தரபாண்டி சந்தன கிருஷ்ணன் வாடிப்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் மாயக்கண்ணன் தென் மண்டல ஐ ஜி நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்று வழங்கி பாராட்டி உள்ளது தற்போது மதுரை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து பணி (QRT )தனிப்படை காவல்துறையினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story