மாவட்டக் காவல் அலுவலகத்தை ஐஜி திடீர் ஆய்வு

மாவட்டக் காவல் அலுவலகத்தை ஐஜி திடீர் ஆய்வு
X

மாவட்டக் காவல் அலுவலகத்தை ஐஜி திடீர் ஆய்வு

கள்ளகுறிச்சி மாவட்டக் காவல் அலுவலத்தில் ஐஜி வருடாந்திர ஆய்வினை மேற்கொண்ட போது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்
நேற்று வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார், அப்போது மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்ற பிரிவு, சமூக நீதி மற்றும் பாதுகாப்பு பிரிவு ஆகிய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டார், பின்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட அறிவுரைகள் வழங்கினார்.

Tags

Next Story