கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியல்

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியல்
கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியல்
மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு ஊராட்சி ஊராட்சியின் தலைவராக இருப்பவர் சாந்தி. இந்த ஊராட்சியில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. இன்று 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது... இந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் பல முறைகளில் செய்து நிதியை தவறாக பயன்படுத்தி கையாடல் செய்து இருப்பதாக கிராம மக்களுக்கு தெரிய வந்திருந்த நிலையில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தில் இதைக் கேட்க சுமார் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கிராம சபை கூட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் கிராம சபை கூட்டம் தொடங்கிய சில நிமிடத்தில் கணக்கு வழக்குகளை கேட்கத் தொடங்கி இருந்த நிலையில் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் கிராம மக்கள் சரிமாராக கேள்வி கேட்டிருந்தனர்.

அவர்கள் சரிவர பதில் அளிக்காததால் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்து இருந்த பொழுது அவர் நேரில் வருவதாக கூறியிருந்தார்... அதன் பிறகு சிறிது நேரத்தில் கிராம சபை கூட்டம் முடிந்ததாக கிராம சபை கூட்டத்தை விட்டு வெளியேறிய ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் செயலாளர் சுந்தர் ஆகியோர் வெளியேறியதையும் நடக்காத கூட்டத்தை நடந்ததாக கூறியதை கண்டித்து மதுராந்தகம் To உத்திரமேரூர் சாலையில் புதுப்பட்டு என்ற இடத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாததால் காவல்துறையினர் அவர்களை குண்டு கட்டாக தூக்கி டாட்டா ஏசி மூலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story