இலவச உயர்கல்வி, உயர்தர மருத்துவ சிகிச்சை - பாரிவேந்தர் வாக்குறுதி.

இலவச உயர்கல்வி, உயர்தர மருத்துவ சிகிச்சை - பாரிவேந்தர் வாக்குறுதி.

பாரிவேந்தர் 

நான் வெற்றி பெற்றவுடன் ரூ.10 லட்சம் மதிப்பில் 1500 குடும்பங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை பெறவும், பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 300 பேர் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 1500 மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி பெறவும் வழிவகை செய்வேன் என முதுவத்தூர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பாஜ கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேத்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

முவத்தூர் கிராமத்தில் ஆணையடியான் கோயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரிவேந்தர் பேசும் போது, நான் கடந்த 5 ஆண் டுகளில் எண்ணற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். எனது பல்க லைக்கழகம் மூலம் லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 1200 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி எனது சொந்த செலவில் வழங்கி உள்ளேன்.

தொகுதி மேம் பாட்டு நிதியில் பள்ளி கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட அதியாவசிய பணிகள் செய்துள்ளேன். இந்த முறை நான் வெற்றி பெற்றவுடன் ரூ.10 லட்சம் மதிப்பில் 1500 குடும்பங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை பெறவும், பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 300 பேர் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 1500 மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி பெறவும் வழிவகை செய்வேன்.

இப்பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி விளைவிக்கும் போதிய விலை கிடைக்காத நிலையில் உள்ளனர் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து மக்காச்சோளம், பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார். தொடர்ந்து கல்லக்குடி, மேலரசூர், மால்வாய், கல்லகம்,சரடமங்கலம், ஆலம்பாக்கம், திண்ணகுளம், விரகாலூர், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட 37 கிராமங்களிலும், இரண்டு பேரூராட்சிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் ஐஜேகே மாநில தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்யநாதன், அமைப்பு செயலாளர் அன்புதுரை, மாவட்ட தலைவர் செல்வகுமார், பாஜக மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story