இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்!
தேரோட்டம்
இளஞ்சாவூர் ஊரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்.
புதுகோட்டை மாவட்டம் திருமயம் அருகே இளஞ்சாவூர் ஊரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கடந்த 5ஆம் தேதி பூச்சாரிகள் விழா நடந்தது. இதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூத்தட்டுகள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இந் நிகழ்ச்சி பங்குனி பொங்கல் கரகம் எடுத்தல் மற்றும் தேரோட்டம் நேற்று நடந்தது. கோயில் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கோயில் பூசாரி கருப்பையா திருமயத்தில் இருந்து கரகம் எடுத்து கோயிலுக்கு வந்தார் மாலை 6:30 மணி அளவில் கரகம் கோயிலை வந்து அடைந்ததும் அம்மனின் கர்ப்பகி ரஹத்தில் பால் குடத்தில் விளிம்பில் கூறிய கத்தி நிற்கும் சம்பிரதாயம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியதும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரவு 7:50 மணிக்கு தொடங்கிய தேர் 8:55 மணிக்கு நிலையை அடைந்தது.இளஞ்சாவூர், திருமயம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story