கந்தர்வகோட்டையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 2.0 தொடக்கம்!
கந்தர்வகோட்டையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 2.0 தொடங்கப்பட்டது.
கந்தர்வகோட்டையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 2.0 தொடங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டியில் இல்லம் தேடிக் கல்வி மையம் 2.0 என்ற திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு தலைமை ஆசிரியர் க.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் (தொடக்க W கல்வி) கோவிந்தன் இல்லம் தே கல்வித் திட்ட 2.0 வை தொடங்கிவைத்து பேசினார்., இதில், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன், ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவி மலர்கொடி, வார்டு உறுப்பினர் கலாராணி, ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், செல்விஜாய், தன்னார்வலர் நித்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
Next Story