அரசின் அனுமதி பெறாமல் முறைகேடாக பாறைக்கு வெடி வைப்பு வீடுகள், பறவை இனங்கள் கடும் பாதிப்பு..
அரசின் அனுமதி பெறாமல் முறைகேடாக பாறைக்கு வெடி வைப்பு வீடுகள், பறவை இனங்கள் கடும் பாதிப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் பிரதான சாலையில் நீதிமன்றம் அடுத்துள்ள அகரம்நகர் ஸ்ரீ மகாலட்சுமி நகரில், கட்டனாச்சம்பட்டி கிராம எல்லையில்தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த ஓராண்டு காலமாக பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல வீடுகள் சூழ்ந்துள்ள இப்பகுதியில் தினந்தோறும் பலமுறை வெடிகள் வைக்கப்க்கப்பட்டு பாறைகள் உடைத்து எடுத்துச் செல்லப்படுகிறது. தினந்தோறும் பலமுறை வெடிகள் வெடிக்கப்பட்டு வரும் சூழலில் பொதுமக்கள் நடமாடவே பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. வேட்டுகள் வெடிக்கும் பொழுது இப்பகுதியில் உள்ள பறவையினங்களும் பாதிக்கப்படுகிறது. வெடி வெடிக்கும் பொழுது ஏற்படும் அதிர்வு பெரும அச்சத்தை இப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. வெடி வைக்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக அறிவிப்பு கூட அருகில் உள்ள வீடுகளுக்கு பொது மக்களுக்கு தெரிவிப்பதில்லை. இப்பகுதியில் விபத்தோ, உயிர் சேதமோ ஏற்படுவதற்கு முன்பாக வெடி வெடித்து பாறைகள் உடைப்பதை தடுக்கப்பட வேண்டும். அரசின் அனுமதி பெற்று முறையாக செயல்பட வேண்டும். அரசின் அனுமதி பெறாமல் நடைபெறும் இதனை அரசு நிர்வாகம் கண்டு கொள்வதாக தெரியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Next Story