சட்டவிரோதமாக சூதாடியவர் கைது

X
சட்டவிரோதமாக சூதாடியவர் கைது
கோரமடை ஓடையில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்த காவல்துறையினர் ரூபாய் 265 பறிமுதல் செய்தனர்
கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கடவூர் தாலுகா, செங்காட்டூர் அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் மணிசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், டிசம்பர் 24ஆம் தேதி மதியம் ஒன்னேகால் மணி அளவில், செங்காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள கோரமடை ஓடை அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட வெள்ளியணை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன், கடவூர் தாலுக்கா, செங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா, சரத்பாபு நல்லூரான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகள், ரூபாய் 265 ஐ பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர், காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிபட்டி காவல்துறையினர்.
Next Story
