மறவாபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது
கோப்பு படம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மறவாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக, மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 5ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், மறவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கரூர் மாவட்டம்,புகலூர் தாலுக்கா, காளிபாளையம் அருகே உள்ள வேட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 48 என்பவர் மறவாபாளையம் டாஸ்மார்க் கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 7 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.