சட்டவிரோத மது விற்பனை - இருவர் கைது.

மாயனூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக, மாயனூர் காவல்துறை மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் மாயனூர் காவல் ஆய்வாளர் சாந்தி கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, முனையனூர்,அருகே உள்ள கீழ முனையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அவரது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவரிடம் இருந்து 9- குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கோவிந்தராஜ் என்கிற கண்ணன் என்பவரை, கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த ஒன்பது மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த மாயனூர் காவல்துறையினர், பின்னர் இருவரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story