சட்டவிரோத மது விற்பனை- ஒருவர் கைது

சட்டவிரோத மது விற்பனை- ஒருவர் கைது

சாராயம் பறிமுதல்

வேளாங்கண்ணி அருகே உள்ள அகலங்கள் சுடுகாட்டில் சாராயம் விற்றவர் கைது செய்ததோடு அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டத்தில் சாராயக்கடைத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 10 சனிக்கிழமை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரத்குட்பட்ட அகலங்கன் பகுதியில் வேளாங்கண்ணி போலீஸ் வெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டினார்.

அப்போது அங்குள்ள சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் தன்னிலை பாடி தோப்பு தெரு பகுதியை சேர்ந்த பக்கிரி சாமி மகன் பிரபாகரன் வயது 38 என்பதும் சாராய விற்பனை ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்பாக பிரபாகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story