சட்டவிரோத மது விற்பனை – வாலிபர் கைது
சட்டவிரோத மது விற்பனை
கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா பள்ளப்பட்டி சௌந்தராபுரம் பிரிவு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 5ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் சவுந்தாராபுரம் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தெற்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 35 என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஒன்பது குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Next Story