அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனை......
காவல்துறை
அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனை. பெண் உள்பட நான்கு பேர் மீது வழக்கு.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, சின்ன தாராபுரம், தென்னிலை உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் காவல் உதவி ஆய்வாளர்கள் மகாமுனி, சந்திரசேகரன், செந்தில்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் மார்ச் 7ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையில் அரவக்குறிச்சி, சூரிபள்ளி டாஸ்மார்க் கடை அருகே முள் தோட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ராஜபிரபு, சின்னதாராபுரம், அம்பேத்கர் காலனி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ராமசாமி மனைவி மகேஸ்வரி சக்தி, க. பரமத்தி அருகே விஸ்வநாதபுரி எம்ஜிஆர் நகர் பகுதியில் வீட்டின் அருகே உள்ள முள் தோட்டத்தில் விற்பனை செய்த கோவிந்தராஜ், தென்னிலை அருகே கட்டாம்பட்டி, மூலக்கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேரிடமிருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த 19 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 4- பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.