சட்டவிரோதமாக 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கடத்தல்: இருவர் கைது!
டீசல் கடத்தல்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காவல் உதவி ஆய்வாளர் நீலகண்டன், தனிப்பிரிவு தலைமைக் காவலர் செல்லச்சாமி மற்றும் போலீசார் இன்று அதிகாலை மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரை கண்டதும் டேங்கர் லாரி ஒன்று சாலையோரமாக ஒதுக்கி நிறுத்தப்பட்டதை கவனித்த போலீஸார் அந்த லாரியை சோதனையிட்டனர்.
சோதனையில்இ டேங்கர் லாரியில் 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டேங்கர் லாரி ஓட்டுநர் உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபூரைச் சேர்ந்த ராம் பகதூர்(39)இ லாரி கிளீனர் எட்டயபுரம் அருகே செமப்புதூரைச் சேர்ந்த அய்யனார்(37) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் எந்தவித அனுமதியின்றி உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக ஆந்திரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், டேங்கர் லாரியை பறிமுதல் செய்து எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.