சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்
பட்டாசுகள் பறிமுதல்
சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேட்டை தெருவை சேர்ந்த ஞானகிரி என்பவர் பஜார் பகுதியில் ஞானகிரி என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்,மேலும் இவரது கடையின் பின்புறம் சட்டவிரோதமாக பட்டாசுகள் இருப்பு இருப்பதாக சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர் அரசு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பலதரப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து,கடை உரிமையாளர் ஞானகிரி மீது சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story