கள்ளச்சாராயம் பதுக்கல் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
பைல் படம்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்,உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மது விலக்கு அமலாக்கு பிரிவு காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை மாவட்டம் கீழையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தாண்டவன் மூர்த்திகாடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காமேஸ்வரம் கரும்பாயிரம் (60) மகன் வெற்றிவேல் (40) வெற்றிவேல் மருமகள் லலிதா ( 34)ஆகிய 3 நபர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இதெறிவித்துள்ளார்கள். மேலும், இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.