மது விற்பனை - இருவர் கைது

X
மது விற்றவர் கைது
கள்ளக்குறிச்சியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை சட்டவிரோத மது விற்பனை செய்த இருவரை கைது செய்தனர்.
பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது, ஏந்தல் ஏரிக்கரை அருகே கீழத்தேனுார் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் லட்சுமணன், 21; கிருஷ்ணமூர்த்தி மகன் பாபு, 28; ஆகிய இருவரும் கர்நாடக மாநில மதுபான பவுச்சுகளை விற்றது தெரிந்தது.
தொடர்ந்து, லட்சுமணன் மற்றும் பாபு ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 23 மதுபான பவுச்சுகள் மற்றும் டிஎன் 25 சிடி 4804 என்ற பதிவெண் கொண்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story