உடல் நலக்குறைவு - மன்சூர் அலிகானுக்கு ஐசியூவில் சிகிச்சை

உடல் நலக்குறைவு -  மன்சூர் அலிகானுக்கு ஐசியூவில் சிகிச்சை

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

உடல்நல குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் சென்னை கே கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அங்கு தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள கே.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஐ சி யு வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌

Tags

Next Story