இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது.



நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த மே 27ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மகாபாரதக் கதை பாடப்பட்டு வந்தது. முக்கிய நிகழச்சியாக நேற்று முநகாலை 18 நாள் யுத்தத்தில் கவுரவர்களும், பாண்டவர்களும் மடிந்து கிடக்கும் காட்சியை திரவுதியம்மன் கண்டு களித்து தனது சபதம் நிறைவுற்றியதை யடுத்து அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மாலை செருநல்லூரி திரவுதியம்மன் கோயில் இருந்து இலுப்பூர் திரவுதியம்மன் கோயிலுக்கு கொந்தம் (வேல்) எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயில் அருகே உள்ள திமிதி திடலில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் திருவசா குளக்கரையில் இருந்து காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் ஊர்வலவமாக வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று கொடி இறக்கப்பட்டது. இன்விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணிமன்றத்தில் செய்திருந்தனர்.

Tags

Next Story