இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இமான் அண்ணாச்சி பிரச்சாரம்

திருப்பூரில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரம் மேற்கொண்டார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து திருப்பூர் சூசையாபுரத்தில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை கூறி கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்துள்ளது. இந்த 10 ஆண்டு காலத்தில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக கொள்ளை கும்பல் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி தெரிவித்தார். ஆனால் யாருக்கும் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. இவ்வாறாக தொடர்ந்து மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதனை மக்கள் நம்பக் கூடாது. வருகிற 19 ஆம் தேதி கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஊழல் ஆட்சி அகற்ற உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story