திருச்செங்கோடு அய்யப்பன் கோவிலில் குடமுழுக்கு விழா

X
குடமுழுக்கு விழா
அய்யப்பன் கோவிலில் குடமுழுக்கு விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோட்டில் CHB காலனியில் அமைந்துள்ள அருள்மிகு அய்யப்பன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. சபரிமலை பிரதான தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு ராஜீவரு இளைய தந்தரி பிரம்மஸ்ரீகண்டரரு பிரம்ம தத்தன் ஆகியோர் நடத்தி வைத்தனர் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பது போல் அனைத்து சடங்குகளும் செய்யபட்டது குடமுழுக்கு விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் மற்றும் நகர பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Tags
Next Story
