சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் - சாய்ந்த வாழை மரங்கள்

சங்ககிரி அருகே சுட்டெரிக்கும் வெயிலை தாக்கு பிடிக்காமல் 5 ஆயிரம் வாழை மரங்கள் பிஞ்சு காய்களுடன் சாய்ந்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வாழை காய்கள் விலை குறைவால் பிஞ்சு காய்களுடன் டிராக்டரில் உழவு செய்து அழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் , சென்றாயனூர், பெரமச்சிபாளையம் , வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், புதுப்பாளையம்,காவேரிப்பட்டி,செட்டி பட்டி, வட்ராம்பாளையம், தண்ணிதாசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி கதளி, நேந்திரம்,தேன் வாழை, மொந்தன் வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்துள்ளனர்.

அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது வாழை தார் விட்டு பிஞ்சு காய்களாக இருக்கும் தருணத்தில் தேவூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதால் வாழை மரங்கள் வாடி வதங்கி பிஞ்சு காய்களுடன் உடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வாழை காய்கள் விலை குறைவால் பிஞ்சு காய்களை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் விரக்தி அடைந்து டிராக்டரில் உழவு செய்து பிஞ்சு காய்களுடன் சாய்ந்த வாழை மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சென்றாயனூரில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயி ஆனந்தன் கூறியதாவது 9 மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய கதளி ரக வாழை கன்றுகளை கடந்த 7 மாதத்திற்கு முன்பு 3 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தேன்,வாழை கன்றுகள் நடவு செய்ய ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி ,மொமரயனூர்,கண்ணாமூச்சி பகுதியில் இருந்து கதளி ரக வாழை ஒரு கன்று ரூ12 வீதம் வாங்கி வந்து ஏக்கர்க்கு ஆயிரம் கன்றுகள் வீதம் 3ஏக்கர்க்கு 30ஆயிரம் கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணிகள் செய்து வந்தோம், இதுவரை 2இலட்சம் வரை பராமரிப்பு செலவு செய்து உள்ளோம்.

இந்நிலையில் சாகுபடி செய்து 8மாதங்கள் ஆகியுள்ளது தற்போது காய்கள் காய்த்து பிஞ்சு காய்களுடன் இருந்த வாழை மரங்கள் சுட்டெரிக்கும் வெயிலால் வாடி வதங்கி தாக்குபிடிக்காமல் உடைந்தது, இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, மேலும் விலை குறைவால் பிஞ்சு காய்களை வாங்க வியாபாரிகள் வராததால் விரக்தி அடைந்து டிராக்டரில் உழவு செய்து அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story