மழை வெள்ள பாதிப்புகள் - ஆட்சியர் ஆய்வு
அருப்புக்கோட்டை அருகே பெரிய தும்மக்கூண்டு பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. தேங்கிய மழை நீர் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் வெளியேறாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெரியதும்மகுண்டு காலனி குடியிருப்பு பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story