வெப்ப அலை குறித்த முக்கிய அறிவுப்பு
மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.4.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், இராணிப் பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப் பள்ளி, அரியலூர்,பெரம்ப லூர், மாவட்டங்களில் 24.4.2024 இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவ சிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும்,வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Next Story