இரண்டாம் நிலை காவலர் தேர்வு.. கொஞ்சம் இதெல்லாம் கவனிங்க...!

இரண்டாம் நிலை காவலர் தேர்வு.. கொஞ்சம் இதெல்லாம் கவனிங்க...!

இரண்டாம் நிலை காவலர் தேர்வினை எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை காவலர் தேர்வினை எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் , இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 3359 இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வானது *பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து தேர்வர்களுக்கும் பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் வரும் டிசம்பர் பத்தாம் ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த எழுத்து தேர்வானது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, காவல் துறை தலைவர் அன்பு மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த எழுத்து தேர்வினை மொத்தம் 5220 தேர்வாளர்கள் 261 தேர்வறைகளில் எழுதுகின்றனர். மேலும் இந்த தேர்விற்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்விற்கு வரும் நபர்கள் கொண்டுவரக் கூடாதவைகள், எழுத்து தேர்விற்கு வரும் நபர்கள் செல்போன்,கால்குலேட்டர்,புளூட்டூத் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பணப்பை பர்ஸ், புத்தகங்கள் போன்ற எந்தவித உடைமைகளையும் கொண்டுவர அனுமதி இல்லை என்று மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்விற்கு வரும் நபர்கள் கொண்டுவர வேண்டியவைகள்.

தேர்விற்கு வரும் நபர்கள் கட்டாயம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை கொண்டு வரவேண்டும். கொண்டுவராதவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்விற்கு வரும் நபர்கள் அனைவரும் கட்டாயம் தங்களது புகைப்படம் கூடிய அரசால் வழங்கப்பட்ட ஆதார்,ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கொண்டுவர வேண்டும். மேலும் முக்கியமாக தேர்வு நடைபெறும் அன்று காலை 08.00 மணிக்கு தேர்விற்கு வர வேண்டும். எழுததுத் தேர்விற்கு வரும் தேர்வாளர்கள் துறையூர் சாலையில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது என்பதை மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story