தாசில்தார் அலுவலகத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

தாசில்தார் அலுவலகத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

திருத்தணி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆண்டு கணக்கில் ஏலம் விடப்பததால் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.

திருத்தணி தாலுகாவில், உள்ள திருத்தணி, திருவாலங்காடு மற்றும் கனகம்மாசத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து குற்ற வழக்குகளில் சிக்கிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலம் விடுவதற்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இதுதவிர, மணல், கிராவல் மற்றும் ரேஷன் அரிசி உட்பட பல்வேறு கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களையும் வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வருகின்றனர்.

இந்த வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பொதுஏலம் விட வேண்டும். அதன் மூலம் வரும் வருவாய்யை அரசுக்கு செலுத்த வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோக்கள் ஏலம் விடாமல் திறந்தவெளியில் போடப்பட்டுள்ளது. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வாகனங்கள் பழுதாகி வருகிறது.

மேலும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மண்ணில் புதைந்து வருகிறது. இதனால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே, குற்றவழக்குகளில் சிக்கிய வாகனங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொது ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

Tags

Next Story