சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் கடுங்காவல் தண்டனை

சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் கடுங்காவல் தண்டனை
தண்டனை 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை ஊழியர் சிறுமியை கர்ப்பமாகிய வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை‌ விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மகள் முறையுள்ள சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் வனத்துறையில் ஊழியராக பணியாற்றினார்.இவர் கணவனை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்து தன் வீட்டில் அப்பெண்ணுடன் வசித்து வருகிறார். கணவனை இழந்த அப்பெண்ணுக்கு மகள் ஒருவர் உண்டு. அச்சிறுமியும் தன் தாயுடன் அதை வீட்டிலே வசித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அச்சிறுமியை சுமார் பத்து மாதங்களாக பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து வந்துள்ளார் இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளையன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 50,000 அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story