காங்கேயத்தில் வெளி மாநில வாகனங்கள் சிறைப்பிடிப்பு

காங்கேயம் கரூர் சாலையில் வெளி மாநில வாகனத்தை சிறைபிடிப்பு -  பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்தார். காங்கேயம் பகுதியில் முறையான அனுமதி இல்லாமலும் வெளி மாநில சொந்தப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வாகனங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை இயக்கி வருகின்றனர் நடவடிக்கை எடுக்க சொல்லி புகார்.

காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகைக்கு பயன்படுத்தும் கார்,வேன்,பஸ் என 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. வாடகைக்கு இயக்கப்படும் கார்களுக்கும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கார்களுக்கும் காப்பீடு, தகுதிச்சான்று (FC ), சாலைவரிகள் ஆகியவைகளில் செலுத்தப்படும் தொகைகள் வித்தியாசத்திற்கு உட்பட்டவை.

இந்நிலையில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய கார், ஜீப் போன்ற வாகனங்களை வைத்து நாள் வாடகைக்கும், மாதாந்திர வாடகைக்கும், வருட வாடகைக்கும் முடிவு செய்து காங்கேயம் பகுதிகளில் இயக்கப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் வெளி மாநில வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் குறிப்பிட்ட நாட்கள் சுற்றுலா வர அனுமதி பெற்று விட்டு நிரந்திரமாக தொழில் சார்ந்து வருட கணக்கில் இங்கு ஆட்களை ஏற்றி பணிக்கு செல்லும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதில் மேலும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் அரசு சார்ந்த கான்ட்ராக்ட் பணிகளுக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு சென்று மீண்டும் மாலை நேரத்தில் கூட்டிவருவதற்கும் இந்த வாகனங்களை இயக்குகின்றனர். 12 நபர்கள் செல்லக்கூடிய வேனில் 30 நபர்களையும் 9 நபர்கள் செல்லக்கூடிய ஜீப்பில் 22 நபர்களையும் 4 நபர்கள் செல்லக்கூடிய கார்களில் 7 நபர்களையும் அழைத்துச் செல்கின்றனர். இப்படி செல்வது உயிருக்கு ஆபத்து என்பதை காட்டிலும் சட்டவிரோதமானது.

எந்த அடிப்படையில் இந்த வாகனங்கள் காங்கேயம் பகுதிகளில் இவ்வளவு நாட்களாக இயக்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் மாநிலம் விட்டு மாநிலம் வரும்போது எவ்வாறு சோதனை சாவடிகளை கடந்து வருகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர். தனியார் வாகன ஓட்டிகள் பல்வேறு முறை புகார் கொடுத்தும் இன்று வெளிமாநில 4 வாகனங்களை சிறைபிடித்த பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து வாகனங்களை மீட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

Tags

Next Story