அணை மதகுகளில் கோளாறு; பொதுமக்கள் குற்றச்சாட்டு
பிராமணக்குறிச்சி கண்மாயில் பொதுப்பணித் துறையினர் தவறாக அணை மதகுகளை அமைத்துள்ளதால், தண்ணீர் தேக்குவதில் தாமதமாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இளையான்குடி அருகேயுள்ள பிராமணக்குறிச்சி கண்மாயில் பொதுப்பணித் துறையினா் தவறான அளவில் மதகு கட்டியதால், தண்ணீா் தேக்குவதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கோடை விவசாயத்துக்காக வைகை அணையிலிருந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு, சுமாா் 3 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இளையான்குடி அருகே உள்ள பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து இடது பிரதானக்கால்வாய் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரால் பிராமணக்குறிச்சி கண்மாய் சுமாா் 3 மணி நேரத்தில் நிரம்பி வந்தது. ஆனால், தற்போது பிராமணக்குறிச்சி கண்மாய்க்கு பிரித்து விடப்படும் இடத்தில் ஏற்கெனவே மூன்றரை அடி அகலத்தில் இருந்த மதகை அகற்றிவிட்டு, புதிதாக ஒன்றரை அடியில் மதகு அமைக்கப்பட்டது. பொதுப்பணித் துறையின் தவறான கட்டுமானத்தால் 3 நாள்களை கடந்தும் இந்த கண்மாய் நிரம்பவில்லை என இந்தப் பகுதிவிவசாயிகள் குற்றம் சாட்டினா்