5 மாதங்களில் ரயிலில் அடிபட்டு 33 பேர் பலி !

5 மாதங்களில் ரயிலில் அடிபட்டு 33 பேர் பலி !

 எச்சரிக்கை

திண்டுக்கல் ரயில் நிலைய பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் ரயிலில் அடிபட்டு 33 பேர் பலியாகி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் ரயில் நிலைய பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் ரயிலில் அடிபட்டு 33 பேர் பலியாகி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கில் கடக்கும்போது அதைவிட எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

அப்போது பொறுமையுடன் ரயில்வே தண்டவாளத்தின் இருபுறமும் பார்த்து ரயில் வரவில்லை என்பதை உறுதிசெய்த பிறகே கடக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. மேலும், குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சிலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story