நாட்றம்பள்ளி அருகே இருவருக்கு மோதல் ஏற்பட்டதில் கல்லால் தாக்கி ஒருவர் மண்டை உடைப்பு!

நாட்றம்பள்ளி அருகே இருவருக்கு மோதல்  ஏற்பட்டதில்  கல்லால் தாக்கி  ஒருவர் மண்டை உடைப்பு!

போராட்டம்

நாட்றம்பள்ளி அருகே பள்ளி பேருந்தில் மகனை ஏற்ற வந்த வருக்கும் மற்றொருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கல்லால் தாக்கி ஒருவர் மண்டை உடைந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பள்ளி பேருந்தில் மகனை ஏற்ற வந்த வருக்கும் மற்றொருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கல்லால் தாக்கி ஒருவர் மண்டை உடைப்பு! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன் இவருடைய மகன் சரண் இவர் நாட்றம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.இவரை அழைத்துச் செல்ல அப்பகுதிக்கு பள்ளி பேருந்து வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் மாணவர் சரணை அழைத்துச் செல்ல அப்பகுதிக்கு பள்ளி பேருந்து வந்துள்ளது. ஜங்களாபுறம் பகுதியிலிருந்து ஆத்தூர் குப்பம் செல்லும் சாலையில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது கிருஷ்ணகுமார் பள்ளி பேருந்து வரும் சாலையில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை குறிக்கில் நிறுத்தியுள்ளார். பள்ளி பேருந்து செல்ல முடியாததால் பள்ளி பேருந்து ஓட்டுநர் மற்றும் மாணவர் சரணின் தந்தை சத்தியசீலன் பள்ளிக்கு நேரமாகிறது.

மாட்டு வண்டியை எடுத்து பள்ளி பேருந்திற்கு வழிவிடுமாறு கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணகுமாருக்கும் சத்தியசீலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் அங்கிருந்த கருங்கல்லை எடுத்து சத்தியசீலன் மண்டையில் அடித்துள்ளர். இதில் படுகாயம் அடைந்த சத்தியசீலன் தலையில் ரத்தம் வடிய அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தியசீலனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்னர்.

மேலும் இதில் ஆத்திமடைந்த சத்தியசீலனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கிருஷ்ணகுமாரை கைது செய்ய வலியுறுத்தி நாட்றம்பள்ளி காவல்நிலத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலிசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் கல்லால் தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை போலிசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story