குடும்ப தகராறில் மனைவி மாயம் - கணவர் போலீசில் புகார்

குடும்ப தகராறில் மனைவி மாயம் - கணவர் போலீசில் புகார்

கணவர் புகார் 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா விளாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 45), லாரி டிரைவர். இவரது மனைவி சரிதா(வயது 40). இவர்களுக்கு ரஞ்சித்குமார் (வயது19) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 27ம்தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபித்துக்கொண்டு சரிதா, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த குறிப்பேடு கிராமத்தில் உள்ள தனது சகோதரி காமாட்சி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து வெளியே சென்ற சரிதா திடீரென மாயமானார். அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குமரவேல் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பாகரன் வழக்குப் பதிவு செய்து மாயமானதாகக் கூறப்படும் சரிதாவை தேடி வருகிறார்.

Tags

Next Story