ஆலங்குடியில் சகோதரர்கள் இருவருக்கு அருவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மளிகைக் கடை உரிமையாளர், அவரது சகோதரரை திங்கள்கிழமை இரவு அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆலங்குடி கலிபுல்லாநகரைச் சேர்ந்தவர் மு.முபாரக்(54), கல்லாலங்குடி விநாயகர் கோயில் அருகே மளிகைக் கடை நடத்திவருகிறார். இவரும், இவரது சகோதரர் மு.லெட்சம் முகமதுவும் மளிகைக் கடையில் திங்கள்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த 2 மர்மநபர்கள் அரிவாளால் ன லெட்சம் முகமதுவை வெட்டியுள்ளனர்.
இதைத் தடுக்க முயன்ற முபாரக்கையும் வெட்டிவிட்டு மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த இருவரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ஆலங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story