கோவையில் முன் விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திக்குத்து-இருவர் கைது!

கோவையில் முன் விரோதம் காரணமாக இளைஞருக்கு கத்திக்குத்து-இருவர் கைது!
X
கைது
கோவையில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: குனியமுத்தூர் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(29) தள்ளு வண்டியில் உணவு விற்பனை செய்து வருகிறார்.கடந்த ஆண்டு தீபாவளியின் போது தனது நண்பர் முத்துராஜாவின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது குனியமுத்தூர் பகுதிதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ராஜு மற்றும் சந்திரன் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பெரியசாமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பெரியசாமி புகார் அளித்தார் புகார் அளித்த நிலையில் போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று பெரியசாமி தனது வீட்டின் அருகே நடந்த சென்று கொண்டிருந்தபோது முன்பகையை மனதில் வைத்து ராஜுமற்றும் சந்திரன் இருவரும் பெரியசாமி வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story