தர்மபுரியில் பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

தர்மபுரியில் பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு

பூக்கள் விலை அதிகரிப்ப்ய்

தர்மபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு காணப்படுகிறது.
தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் தர்மபுரி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது தற்போது கோடை காலம் என்பதால் மலர் சாகுபடி குறைந்து பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று தர்மபுரி சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இன்று ஒரு கிலோ குண்டுமல்லி 500 ரூபாய்க்கும், சன்னமல்லி 320 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், சம்பங்கி 240 ரூபாய்க்கும்,ரோஸ் ஒரு ரோஸ் கட்டு 50 ரூபாய்க்கும், சாமந்தி 300 ரூபாய்க்கும், சென்டு மல்லி 80 ரூபாய்க்கும்,கோலிகொண்டை 150 ரூபாய் என பூக்கள் விற்பனையானது.

Tags

Next Story