தர்மபுரியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
தர்மபுரி உழவர் சந்தையில் வரத்த சரிவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது
தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளி சாகுபடி பயிரிடப்பட்டு வருகின்றது விளைவிக்க விளைவிக்கப்படும் தக்காளி பாலக்கோடு மற்றும் அரூர் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள தக்காளி மார்க்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளூர் தேவைக்கு போக மற்றவை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் சமீப காலமாக பெய்த தொடர் மழையின் காரணமாக தக்காளியின் வரத்து சரிந்ததுள்ளது. இன்று காலை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து சரிவால் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்னும் 15 முதல் 20 நாட்களுக்கு தக்காளி வரத்து சரிந்து காணப்படும் எனவும் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story