ஈரோட்டில் 5நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு

வருமான வரி சோதனை நடந்த அலுவலகம்
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி.CMK கட்டுமான நிறுவன உரிமையாளரான இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் அமைத்து மூலம் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 ம் தேதி முதல் காஞ்சிகோயிலில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் குழந்தைசாமியின் வீடு,சத்தி சாலையில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று பெரியார் நகரில் PV INFRA PROJECT , குழந்தைசாமியின் உறவினரானின் வீடு உள்ள ரகுபதி நாயக்கன் பாளையம், CMK கட்டுமான அலுவலமுள்ள கருப்பண்ணன் வீதி ஆகிய பகுதியில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினர் சோதனை நிறைவு செய்த நிலையில் CMK கட்டுமான உரிமையாளர் குழந்தைசாமி மற்றும் அலுவலகங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை ஐந்தாவது நாளான இன்றுடன் நிறைவடைந்தது.
