போலீஸ் ஸ்டேஷன் முன்பு குடுமிப்பிடி சண்டையால் பரபரப்பு
ஆண்டிப்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குடும்பத்தகராறு காரணமாக பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்டதால், பரபரப்பு உண்டானது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்திருந்த நிலையில் முதல் மனைவியை விட்டு பிரிந்து இரண்டாவதாக வேறு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் கூறப்படுகிறது. இந்நிலையில் கணவனின் மீது முதல் மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்திருந்தனர்.
இதையடுத்து முதல் மனைவி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களும் இரண்டாவது மனைவி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களும் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து காவல் நிலையத்திற்கு முன்பாக நின்றிருந்த போது இரண்டு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு தரப்பை சேர்ந்த பெண்களும் கடுமையாக மோதிக்கொண்டனர் பெண்கள் குடிமையை ஒருவரை ஒருவர் பிடித்து அடித்து சண்டையிட்ட போது ஆண் ஒருவரும் சண்டையிட்டு காவல் நிலையத்தின் அருகே உள்ள பேருந்து நிலைய சாலை வரை சண்டையிட்டு சாலையிலேயே அடித்து உருண்டு கொண்டனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்ள நிலையில் சண்டை நடந்து முடியும் வரை எந்தப்பெண் காவலர்களும் வராமல் அங்கு காவலர் உடை அணியாமல் சாதாரண உடை அணிந்திருந்த ஜீப் ஓட்டும் காவலர் ஒருவர் வந்து இவர்களின் சண்டையை பிரித்து விட்டார் ஆண்டிப்பட்டி நகரில் பேருந்து நிலையம் அருகே முக்கியபகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நடைபெற்ற இரண்டு குடும்ப தரப்பினரிடையே நடைபெற்ற இந்த சண்டை பார்ப்பவர்களிடம் பதற்றத்தையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.
ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பொருத்தவரை குடும்ப பிரச்சனைக்கு புகார் கொடுக்க வருபவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு என்பது சமீப காலமாக அதிகரித்து வருவதோடு இது போன்ற இரண்டு தரப்பு சண்டைகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது இதில் உச்சகட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற கணவன் மீது மனைவி கொடுத்த புகார் விசாரணைக்கு வரும் போது காவல்நிலையத்தின் வாசலிலேயே மனைவியை கணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது