சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

சாலையோரம் கொட்டப்படும்  மருத்துவ கழிவுகள்
X

சாலையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவு 

காஞ்சியில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தாயார் குளம் சாலை வழியாக பிள்ளையார்பாளையம், திருப்பருத்திக்குன்றம், சாலபோகம் உள்ளிட்ட பகுதிவாசிகள் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில் கனிகண்டீஸ்வரர் கோவில் அருகில் சாலையோரம், மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள், காலி மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மருத்துவ கழிவுகளை அகற்றும்போது, பிற கழிவுகளை போல அகற்றாமல், பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும் என, விதி உள்ளது. ஆனால், எந்த விதியையும் பின்பற்றாமல் வீட்டு உபயோக குப்பையை போல, பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையோரம் கொட்டியுள்ளனர். இதனால், காற்றில் பரவும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு, மருத்துவ கழிவுகள் வாயிலாக தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. எனவே, சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story