காஞ்சிபுரத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நேரு கிளை நூலகம் திறப்பு



நூலகம் திறப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் அமைந்துள்ளது நேரு கிளை நூலகம். 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் 5180 வாசகர்களும், 100 க்கும் மேற்பட்ட புரவலர்களும் உள்ளனர்.இந்நூலகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வகை நூல்கள் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் போட்டி தேர்வுக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நூலகத்தை புனரமைக்க கோரி வாசகர் பல கோரிக்கை வைத்ததின் பேரில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது 2020 - 21 ஆம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட நூலக ஆணையம் நிதியின் கீழ் ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்து ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வந்தது.தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அப்பகுதி இருந்ததால் ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கு மீறியதாக ஒரு சர்ச்சை எழுந்ததால் அதனை பொதுமக்கள் நலன் கருதி தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த நுாலகத்தினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஏழிலரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இவ்வுலகத்தில் கீழ் தளத்தில் புத்தகங்களும் முதல் தளத்தில் அனைவரும் அமர்ந்து படிக்கும் வண்ணம் விசாலமான அறை , பெண்கள் மற்றும் குழந்தைகள் படிக்க தனி அறை மற்றும் இருபாலருக்கான நவீன கழிப்பறை என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அரசு பணிகளுக்கான தேர்வு தேர்வாணையம் மூலம் மட்டுமே நடைபெறுவதால் ஏராளமான இளைஞர்கள் நூலகங்களில் உள்ள புத்தகங்களை அதிக அதிக அளவில் தேர்வு செய்து படிக்கும் வகையில் பொதுஅறிவு புத்தகங்களும் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது . நீண்ட சர்ச்சைக்கு பின் இந் நூலகம் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட நூலகர் கிருஷ்ணமூர்த்தி , நேரு கிளை நூலக நூலகர் அறிவுரசு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.



